Saturday, December 28, 2024
HomeSrilankaPoliticsசிங்கள அரசியல்வாதிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை திட்டமிட்டுள்ளனர்

சிங்கள அரசியல்வாதிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை திட்டமிட்டுள்ளனர்

பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை திட்டமிட்டுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், இது முஸ்லீம்களிற்கு எதிரான நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது. அது மீண்டும் நிகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், வைத்தியர் ஷாபி விவகாரம் போன்ற பல விடயங்கள் முஸ்லீம்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments