Home Srilanka பரீட்சையில் சித்தியடையத் தவறிய ஆசிரியர்களுக்கு விரைவில் பரீட்சை

பரீட்சையில் சித்தியடையத் தவறிய ஆசிரியர்களுக்கு விரைவில் பரீட்சை

0

ஆசிரிய நியமனத்திற்காக, தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுந ர்களுக்கு மீண்டும் அந்த பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றம் புதன்கிழமை (24) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. வேலுகுமார் எழுப்பிய, தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சியினை நிறைவு செய்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சித்தியடையாமல் இருப்பதால், அவர்கள் மீண்டும் தோற்றுவதற்கு இன்னும் ஒருவருடம் செல்லும் நிலை இருக்கிறது. அதனால் அதற்கான ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய கல்வியற் கல்லூரியில் 7800 பேர் பயிற்சியை நிறைவு செய்து நியமனத்தை எதிர்ப்பார்த்துள்ளனர். அவர்களில் சுமார் 350 பேர் குறித்த பரீட்சையில் சித்தியடையாதுள்ளனர்.

எனவே, முதல் கட்டமாக 7500 பேருக்கு நியமனத்தை வழங்கியதன் பின்னர், எஞ்சிய 350 பேருக்கும் மீளவும் அந்த பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். அந்த பரீட்சையை காலந்தாழ்த்தாது எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version