Home Srilanka நெடுந்தீவு படகின் சுக்கான் உடைந்ததால் பயணிகள் நடுக்கடலில் தத்தளிப்பு

நெடுந்தீவு படகின் சுக்கான் உடைந்ததால் பயணிகள் நடுக்கடலில் தத்தளிப்பு

0

நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்துகொண்டிருந்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்து, பயணிகள் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், மீனவர்களின் உதவியுடன் அப்பயணிகள் மீட்கப்பட்டு படகுக் கரைக்கு அழைத்துவரப்பட்டனர்.

நெடுந்தீவில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (23) காலை குறிகாட்டுவான் நோக்கி பயணித்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்தமையால் நெடுந்தீவுக்கான போக்குவரத்து தடைப்பட்டது.

சுமார் 70 பயணிகளுடன் பயணித்த சமுத்திரதேவா, மலையடிப் பகுதியை அண்மித்தபோது அதன் சுக்கான் உடைந்துள்ளது.

அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன், படகு நடத்துநர்கள் சாதுரியமாக செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version