Home World Saudi Arabia சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சவுதியின் முதல் விண்வெளி வீராங்கனை

சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சவுதியின் முதல் விண்வெளி வீராங்கனை

0

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ்சின் தனியார் ராக்கெட் புறப்பட்டு சென்றது. இந்த ராக்கெட் அமெரிக்காவின் கேப்கனவெரலில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட்டது.

சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை ரய்யானா பர்னாவி, விமானப்படை பைலட் அலி அல்கர்னி மற்றும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்திவிட்சன், தொழில் அதிபர் ஜான்ஷோப்னர் என 4 பேர் விண்வெளிக்கு சென்றனர். அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ்பால்கென்-9 விண்கலத்தில் பயணம் செய்தனர். இதில் தொழில் அதிபர் ஜான் ஷோப்னர் பணம் செலுத்தி விண்வெளி பயணத்தை மேற்கொண்டார்.

ஆக்சியம் ஸ்பேஸ் ஏஎக்ஸ்-2 திட்டத்தில் அவர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பார்கள். சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் முதல் முறையாக விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளரான ரய்யானா பர்னாவி, சவுதி விமானப் படையின் விமானி அலி அல்-கர்னி அனுப்பப்பட்டுள்ளார். ரய்யானா பர்னாவி, விண்வெளிக்கு சென்ற முதல் சவுதி அரேபிய பெண் என்ற பெருமையை பெற்றார்.

சவுதி அரேபிய அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் சவுதி அரேபியாவை சேர்ந்த வீரர், வீராங்கனையை தனியார் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version