தென் அமெரிக்க நாடான கயானாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மஹ்தியா நகரில் அரசு பள்ளி விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு ஆண்கள், பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பள்ளி விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 19 குழந்தைகள் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள் என அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து தொடர்பாக அதிபர் இர்பான் அலி கூறுகையில், இது ஒரு பயங்கரமான சம்பவம். இது துயரமானது. வேதனையானது என தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 19 குழந்தைகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.