இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் (58), இத்தாலியில் காலமானார். இந்தப் படத்தில் வரும் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கேரக்டரில் நடித்தவர்.
ஸ்டீவன்சன் ஆர்ஆர்ஆர் படத்தில் ஏற்று நடித்திருந்த எதிர்மறையான பாத்திரமும், அவரின் நடிப்பும் வரவேற்பைப் பெற்றது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆர்ஆர்ஆர் படக்குழு, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி! ரே ஸ்டீவன்சன், நிம்மதியாக ஓய்வெடுங்கள். நீங்கள் எங்கள் இதயங்களில் சர் ஸ்காட் ஆக என்றென்றும் இருப்பீர்கள் என பதிவிட்டுள்ளது.