யாழ்ப்பாணம், வசாவிளான் பகுதியில் வீதியில் சென்ற பாடசாலை மாணவியிடம் சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதி மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இன்று (22) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் இது குறித்து பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் சேட்டையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி குரலெழுப்பிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் இராணுவ சிப்பாயை நையப்புடைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தமிழ் இராணுவ சிப்பாயான குறித்த நபர் கடந்த காலத்திலும் இவ்வாறான சம்பவங்களில் சிக்கியிருந்தார் என்றும் கூறுப்படுகின்றது.