பலத்த பாதுகாப்பு மற்றும் சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் காஷ்மீரில் ஜி-20 சுற்றுலா மாநாட்டை இந்தியா நடத்துகின்றது. அதன்படி, இந்த மாநாடு இன்று முதல் புதன்கிழமை வரை கூட்டாட்சி நிர்வாகமான காஷ்மீன் தலைநகரான ஸ்ரீநகரில் நடைபெறவுள்ளது.
2019 இல் இந்தியா, காஷ்மீரில் தனது சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்த பிறகு, அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சர்வதேச நிகழ்வு இதுவாகும்.G20 உறுப்பு நாடுகளில் இருந்து 60 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும் “சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் எந்தவிதமான G-20 கூட்டங்களையும் நடத்துவதற்கு” அதன் உறுதியான எதிர்ப்பை மேற்கோள் காட்டி, சீனா கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளது.