நாடு முழுவதும் பிஸ்கட் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, பிஸ்கட் விலை இன்று முதல் 8 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று பிஸ்கட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் புதிய விலையில் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் பிஸ்கட் நிறுவனங்கள் கூறியுள்ளன.