ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வழக்கொன்று நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவிக்கு மஹிந்த அமரவீர அல்லது திலங்க சுமதிபாலவை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.