ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பானுக்கான இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் கலந்துரையாடுவார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரச தலைவர் ஜப்பானில் இருக்கும் போது சிரேஷ்ட அரச அதிகாரிகள், வர்த்தக தலைவர்கள் மற்றும் இலங்கை சமூகத்தையும் சந்திப்பார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடன் மறுசீரமைப்பு செயல்முறை, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க கலந்துரையாட உள்ளார்.
இதன்போது, கடந்த நிர்வாகத்தினால் திடீரென இடைநிறுத்தப்பட்ட கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.