சீனாவின் சினோபெக் எண்ணெய் நிறுவனம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்பட்டு, ஒப்பந்தம் இன்று (22) ஜனாதிபதி செலயகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தம் நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் நீண்டகால இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான நீண்டகால கூட்டாண்மையை உறுதிப்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சீனாவின் புகழ்பெற்ற பெட்ரோலிய நிறுவனமான சினோபெக் ஃப்யூல் ஒயில் லங்கா (பிரைவேட்) லிமிடெட், இலங்கையின் அதிகரித்து வரும் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.