அவுஸ்திரேலிய, ஹோபார்ட்டின் கடற்கரையோரப் பகுதியில் இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
18-25 வயதுக்கு இடைப்பட்ட இலங்கை பிரஜை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் உயிரிழந்தவர் தொடர்பான அடையாளம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.