அதிபர் தரம் 3 நியமனத்துக்கான போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று ஆரம்பமாகிறது.
6,316 பேர் இந்த நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் தெரிவித்தார். அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இன்று (22) முதல் ஜூன் 1ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் இடம்பெறும்.
அவர்களில் இருந்து 4,718 பேர் தெரிவுசெய்யப்பட்டு நியனம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.