Home Srilanka Politics வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாகமான செயலமர்வு

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாகமான செயலமர்வு

0

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாகமான செயலமா்வொன்று நேற்றைய தினம் சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த செயலமா்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளா் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வடக்கில் கறுவாச் செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தொடா்பாக விளக்க உரை நிகழ்த்தினார்.

அதனைவிட கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் பலரும் இந்த செயலமா்வில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவித்ததுடன், பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.வடபகுதியில் கறுவாச் செய்கையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதற்கான செய்முறை விளக்கங்களும் இங்கு வழங்கப்பட்டதுடன், கறுவா கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டது.  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version