தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய விசேட நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அந்த சந்தேக நபர்களுடன், பல்வேறு போதைப்பொருள்கள், கூரிய ஆயுதங்கள், இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரி-56 துப்பாக்கி தோட்டாக்கள், இராணுவ சீருடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.