Saturday, December 28, 2024
HomeSrilankaநீலக்கல்லுக்கு பதிலாக கண்ணாடி கல்லை வைத்தவர்களுக்கு பொலிஸார் வலை வீச்சு!

நீலக்கல்லுக்கு பதிலாக கண்ணாடி கல்லை வைத்தவர்களுக்கு பொலிஸார் வலை வீச்சு!

கண்டி, பேராதனை வீதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு மாணிக்கக் கற்களை விற்பனை செய்யும் பிரபல விற்பனை நிலையத்துக்கு வந்த மூவர், 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான நீல மாணிக்கக்கல்லை பரிசோதிப்பதாக கூறி போலியான நீலக்கண்ணாடியை வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை கோடீஸ்வரர் போல் வேடமணிந்த நபர் ஒருவர் மேலும் இரு தரகர்களுடன் வந்து இரத்தினக்கற்களை பரிசோதிக்கும் போர்வையில் போலியான கல்லை பயன்படுத்தி 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான உண்மையான மாணிக்கக்கல்லை திருடி அந்த இடத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

இந்த மோசடி நபர்கள் இதற்கு முன்னர் ஒருவரைப் பயன்படுத்தி மாணிக்கக் கல்லின் வடிவத்தைப் பார்த்து அதே வடிவில் போலி மாணிக்கக் கல்லை வெட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்காணிப்பு கமரா அமைப்புகளில் இருந்து பெறப்பட்ட சந்தேக நபர்களின் படங்களை வைத்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டி தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments