Home Srilanka யாழ்ப்பாணத்தில் முப்பெருந் தமிழ் விழா நடாத்த தீர்மானம்

யாழ்ப்பாணத்தில் முப்பெருந் தமிழ் விழா நடாத்த தீர்மானம்

0

உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் முப்பெருந் தமிழ் விழாவை நடாத்தவுள்ளதாக, யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில்  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,பண்பாட்டு தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில், யாழ் பல்கலைக்கழக  முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் முப்பெருந்தமிழ்விழா இடம்பெறவுள்ளது.

பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷினி ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர், தி.ஜோன் குயின்ரஸ், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான முனைவர் மு.இறைவாணி, முனைவர் மு.பாமா உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் சேவைகள் செய்த பலருக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version