Friday, December 27, 2024
HomeWorldSaudi Arabiaரியாத் நகரில் திறக்கப்பட்ட ‘வியா ரியாத்’ ஆடம்பர மையம்

ரியாத் நகரில் திறக்கப்பட்ட ‘வியா ரியாத்’ ஆடம்பர மையம்

கடந்த மே 11ஆம் திகதி சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் மிக ஆடம்பரமான சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமான ‘வியா ரியாத்’ திறந்து வைக்கப்பட்டது.

நவீனத்துவம் மற்றும் ஆடம்பரத்துடன் இணைந்த சல்மானிய கட்டடக்கலை பாணி இப்பகுதியை தனித்துவப்படுத்திக் காட்டுவதோடு, சவூதி அரேபியாவின் தனித்துவமான பாரம்பரியத்தையும் புகழ்பெற்ற அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது.

சவூதியின் தலைநகரில் மிகவும் ஆடம்பரமான இந்த பொழுதுபோக்கு தலத்தைத் திறப்பது, 2023ஆம் ஆண்டுக்கான பொழுதுபோக்குத்துறையில் சவூதி அரேபியாவின் பயணத்தில் ஒரு முக்கிய முயற்சியாக இருக்கும்.

மேற்கூறப்பட்டவாறு ‘வியா ரியாத்’ தலமானது சல்மானிய கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள அதே நேரம், நம்பகத்தன்மை, மனித-மையப்படுத்தல், வாழ்வாதாரம், தொடர் தன்மை, புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை போன்ற மன்னர் சல்மானின் ஆறு முக்கிய விழுமியங்களின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.

மேலும், இது பாரம்பரிய மற்றும் நவீன கட்டடக்கலையின் கலவையாக காணப்படுகிறது. பசுமையான இடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருத்தல் இந்த கட்டட அமைப்பின் முக்கியத்துவங்களில் ஒன்றாக இருப்பதோடு, பட்டத்து இளவரசர், பிரதமர் முஹம்மத் பின் சல்மான் தலைமையில் முன்னெடுத்து செல்லப்படுகின்ற Vision 2030 என்ற சவூதி அரேபியாவின் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.

இந்த தலமானது பலவகைக் கடைத் தொகுதிகள், உணவகங்கள், திரையரங்கங்கள் மற்றும் நேரடி நிகழ்வுகளை நடத்துவதற்கான ஆடம்பர தியேட்டர் அமைப்புகளை கொண்டுள்ளதோடு மிகவும் முக்கியமாக செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலும் இதற்குள் அமைந்துள்ளது.

இந்த தலமானது ரியாத்தில் அல்-சபராத் பகுதியில் அதாவது ‘Diplomatic Quarter’ என அழைக்கப்படக்கூடிய பகுதியில் அமையப் பெற்றிருக்கிறது.

உலகில் உள்ள அதிபுகழ் வாய்ந்த ஆடம்பர ஆபரண பொருட்களை விற்பனை செய்யக்கூடிய தனித்துவமான கடைத் தொகுதிகள், Phoenix Ancient Art, Richard Orlinski, Artfeena போன்ற புகழ்பெற்ற கலை அம்சங்களை விற்பனை செய்யக்கூடிய விற்பனை நிலையங்கள் மற்றும் புகழ்பெற்ற பழங்கால கார்களை காட்சிப்படுத்தும் ‘Seven Gallery’ என்ற காட்சித்தலம் போன்றன வியா ரியாத் தலத்தில் அடங்கியுள்ளன.

தனித்துவமான, பல வித்தியாசமான புதிய அம்சங்களைக் கொண்டமைந்த திரையரங்கங்களை கொண்டிருப்பது வியா ரியாத் தலத்தின் முக்கியத்துவங்களில் ஒன்றாகும்.

‘ஜிம் கன்னா’, ‘ஸ்பாகோ’, ‘இரண்டு-மிச்செலின்-நட்சத்திரம்’ போன்ற உணவகங்கள் உட்பட பல உயர்தர சர்வதேச உணவகங்கள் மற்றும் கஃபேக்களையும் வியா ரியாத் கொண்டுள்ளது.

இந்த இடத்தில் காணப்படக்கூடிய நேரடி நிகழ்வுகளை நடத்துவதற்கான தியேட்டர் பிரபல சவூதி பாடகர் அப்துல் மஜீத் அப்துல்லாவால் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.

வித்தியாசமான ஒரு சூழல், பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பரம் போன்ற எதிர்பார்ப்புகளுடன் ரியாத் நோக்கி வரும் சுற்றலாப் பயணிகள், சவூதி வாழ் மக்களுக்கு இந்த புதிய ‘வியா ரியாத்’ தலமானது மிகச் சிறந்த இடமாக அமைகிறது.

வியா ரியாத் அதன் அனைத்து கட்டமைப்பு முறைமை மற்றும் ஏனைய அம்சங்களில் உயர்தர வடிவமைப்புகளை பிரதிபலிக்கும் வகையிலே அமைந்திருக்கிறது.

பொழுதுபோக்குக்கான இடங்களின் அடிப்படையில் இது தனித்துவமாக காணப்படுகிறது. இதன் கலை மற்றும் அழகியல் அம்சங்கள் கண்களை கவரக்கூடியதாக இருக்கிறது.

குவாலிட்டி ஒஃப் லைஃப் (QoL) திட்ட மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காலித் அல்பக்கர், சவூதி அரேபியாவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தரமான திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

பொது பொழுதுபோக்கு ஆணையம் மற்றும் சவூதி தலைமையின் ஆதரவுடன், இராச்சியத்தின் தலைநகரில் உள்ள புகழ்பெற்ற திட்டங்களில் வியா ரியாத் ஒன்றாகும்.

இந்த QoL திட்டமானது தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட Vision 2030 திட்டங்களில் ஒன்றாகும்.

சல்மானிய பாணியில் அமைந்த கட்டட வடிவமைப்புகள், சர்வதேச உணவகங்கள் மற்றும் கஃபேக்கள், ஆடம்பரமான திரையரங்குகள் மற்றும் ஷொப்பிங் சேவைகளைக் கொண்ட வியா ரியாத், தலைநகரின் கவர்ச்சி போன்றவற்றை மேம்படுத்தும் புதிய அளவிலான ஆடம்பரத்தை வழங்குகிறது என்று மேலும் அல்பக்கர் கூறினார்.

சவூதி அரேபியாவின் விஷன் 2030இன் இலக்குகளை அடைவதற்கான பெரிய முயற்சிகளின் ஆரம்பம் மட்டுமே இந்தத் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments