Home Srilanka கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரபுரம் ஆலய முன்றலில் போராட்டம்

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரபுரம் ஆலய முன்றலில் போராட்டம்

0

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரபுரம் ஆலய முன்றலில், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரபுரம் ஆலயம் அமைந்துள்ள காணியில், தொல்பொருள் சின்னங்கள் இருப்பதாக, தொல்பொருள் திணைக்களம் தெரிவித்த நிலையில் நேற்று குறித்த நிலப்பரப்பை எல்லைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிந்த கிராம மக்கள், அரசியல் கட்சி சார்ந்தவர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர், தொல்பொருள் திணைக்களம் எல்லைப்படுத்தும் நடவடிக்கைக்கு வரும் போது எதிர்ப்பை வெளியிடுவதற்காக, ஆலய முன்றலில் ஒன்றுகூடியிருந்தனர்.

இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் மற்றும் பொதுமக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version