யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி இடம்பெற்றது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால், இன்று பிற்பகல் 2:30 மணியளவில், பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில், அஞ்சலி இடம்பெற்றது.
பொதுச்சுடர், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி ரகுராமினால் ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து, ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலர் இணைந்துகொண்டனர்.