Home Srilanka Politics மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை மே 18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கிரான் சின்னவெம்பு கிராமத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் உறவுகளும் தமிழர் தாயக மக்களும் இணைந்து இன்று காலை இவ் நினைவு தினத்தினை நினைவு கூர்ந்தனர்.

இதன்போது உயிர் நீத்த உறவுகளினை நினைவு கூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச் சுடர் ஏற்றியதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் உயிர் நீத்தவர்களின் நினைவாக தென்னங் கன்றுகளும் வழங்கப்பட்டன. அத்துடன் தமிழர் தாயக மக்கள் அமைப்பின் இணைப்பாளர் குருசுமுத்து வி.லவக்குமார் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நிவைவேந்தல் தொடர்பாக உரையாற்றினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version