பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து ஆறு வயது ஒன்பது மாதமான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு மாணவியின் முகத்தில் எதனையோ தெளித்துவிட்டு மயக்கமடைய செய்த பின்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் விசாரணையில் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.