இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான நான்கு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளில் மூன்று கைவிடப்பட்டன.
ரி20 உலகக் கோப்பைக்காக சிட்னியில் இருந்த 32 வயதான வீரர், ஆரம்பத்தில் அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, ஒரு குற்றச்சாட்டு சான்றளிக்கப்பட்டதாக அரச தரப்பு வழக்கறிஞர் ஹக் புடின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதேநேரத்தில் அனுமதியின்றி உடலுறவு செய்ததற்கான மீதமுள்ள மூன்று குற்றச்சாட்டுகள் அவரால் திரும்பப் பெறப்பட்டன.
நீதிவான் கிளேர் ஃபர்னான் கைவிடப்பட்ட குற்றச்சாட்டுகளை முறைப்படி நிராகரித்ததுடன் வழக்கினை ஜூலை 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.