Home Srilanka Politics கொஸ்லந்தையில் கஞ்சா செடிகள் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகை

கொஸ்லந்தையில் கஞ்சா செடிகள் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகை

0

கொஸ்லந்தை பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் பயிரடப்பட்ட காணி ஒன்றினை நேற்று புதன்கிழமை (17) ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று புதன்கிழமை மாலை குறித்தபிரதேசத்திலுள்ள கஞ்சா செய்கை செய்யப்பட்ட காணியை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு அங்கு 15 பேச் நிலப்பரப்பில் பயிரடப்பட்ட 6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகளை பிடிங்கி அழித்ததுடன் அதில் ஒரு பகுதியை சட்டநடவடிக்கைக்காக் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version