Home Srilanka Politics வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் கஞ்சி பரிமாறல்

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் கஞ்சி பரிமாறல்

0

தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும், முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம் பெற்று வரும் நிலையில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் புதன்கிழமை (17) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு அடம்பன் பகுதியில் தமிழின படுகொலை அஞ்சலி நிகழ்வுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.

அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிகளில் தமிழின படுகொலை நினைவு நாள் மே-18 எனும் தொனிப்பொருளில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, வெள்ளைக்கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மெசிடோ நிறுவன பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version