Home Srilanka Politics முள்ளிவாய்க்கால் கஞ்சி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் பரிமாறல்

முள்ளிவாய்க்கால் கஞ்சி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் பரிமாறல்

0

தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் நிகழ்வு (17) புதன்கிழமை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

இதன் பொழுது பொது மக்கள், வர்தகர்கள், சாரதிகள் உட்பட அனைவருக்கும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது .

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தமிழரசு கட்சியின் முன்னால் நகரசபை,பிரதேச சபை உறுப்பினர்கள் இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அதே நேரம் மன்னார் தோட்டவெளி பகுதியிலும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தோட்டவெளி பகுதி மக்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.

அருட்தந்தைகள் பொது மக்கள் உட்பட பலரும் இணைந்து உணர்வு பூர்வமாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version