ஏனைய மதங்களை நிந்தித்மைக்காக சிஐடி விசாரணையை எதிர்கொண்டுள்ள போதகர் ஜெரோம் பெர்ணாண்டோவிற்கு நாட்டிலிருந்து வெளியேற நீதிமன்றம் நேற்று தடை விதித்தபோதிலும் அவர் ஏற்கனவே நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இலங்கைக்கு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளதாக ஜெரோம் பெர்ணாண்டோ தனது இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ பணிகள் தொடர்பில் வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மே 14 ம் திகதி அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மத நிகழ்வொன்றில் பொதுமக்கள் முன்னிலையில் புத்தர் இஸ்லாம் மற்றும் இந்து மதத்தினை நிந்தனை செய்யும் வகையில் அவர் கருத்துக்களை தெரிவித்திருந்தார் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.