மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முட்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெற்றதாகத் தகவல்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியிலுள்ள ஏனைய சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.