Home Srilanka வவுனியாவில் மதுபோதையில் குழப்பத்தை ஏற்படுத்திய கிராம உத்தியோகத்தர்

வவுனியாவில் மதுபோதையில் குழப்பத்தை ஏற்படுத்திய கிராம உத்தியோகத்தர்

0

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கிராமசேவையாளர் ஒருவர் மதுபோதையில் வந்து குழப்பத்தில் ஈடுபட்டதாக கிராமமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள கிராம அலுவலர் மண்டபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரால் பொதுமக்களுக்கான இலவசஅரிசி வழங்கும் செயற்பாடு நேற்று (13) காலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது மண்டபத்திற்கு சென்ற கிராமசேவகர் நிவாரணம் வழங்கும் செயற்பாட்டிற்கு இடையூறுகளை விளைவித்ததுடன். மதுபோதையில் வந்து, பெண்களையும் திட்டியதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து பிரதேச செயலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் குறித்த பகுதிக்கு வருகைதந்து நிலவரத்தை சுமூகமாக்கியதுடன் கிராமசேவகரை அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் கிராமசேவகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் அதிகாரியிடம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version