வடமாகாணத்தில் கடந்த மூன்று வருடங்களில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மற்றும் விடுப்புச்சான்றிதழைப் பெற்றவர்களின் பட்டியலை உடன் வழங்குமாறு ஆளுநர் ஜீவன் தியாராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாணத்தில் கடந்த மூன்று வருடங்களில் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகுகின்றார்கள்.
திடீரென இடைநடுவில் கல்வியை நிறுத்தி விடுப்புச்சான்றிதழைப் பெறுகின்றார்கள் போன்ற விடயங்கள் அதிகரித்துள்ளதாக தொடர்ச்சியாக தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இந்த விடயம் சம்பந்தமாக நான் விசேட கரிசனையைச் செலுத்தியதன் அடிப்படையில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு அவ்விதமாக இடைவிலகிய மாணவர்களின் பட்டியலை வழங்குமாறு கோரியுள்ளேன்.
அண்மைய காலத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகுகின்ற மாணவர்கள் சமூகக் குற்றங்களுக்களில் ஈடுபடுதல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு இலக்காதல் ஆகிய விடங்கள் தொடர்பிலும் எனக்கு தனிப்பட்ட முறையில் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆகவே இந்த நிலைமைகளை நீடிப்பதற்கு இடமளிக்க முடியாது. நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பது எமது பாரிய கடமையாகின்றது. அந்த வகையில் குறித்த பட்டியலைப் பெற்று உரிய நடவடிக்கைகள் அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.