முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி மூலம் போர்க்கால வரலாற்றையும் அதன் இழப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் செயற்திட்ட நிகழ்வு நேற்று (13) காலை 8.30 மணியளவில் நெல்லியடி பேருந்து நிலைய பகுதியில் இடம்பெற்றது.
அதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இளைஞர் அணியினர் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.