Friday, December 27, 2024
HomeSrilankaவட, கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்

வட, கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், தொண்டமனாறு , வடமராட்சி , நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும் நேற்றைய தினம் (12) வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் , முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாக , முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குமாறு யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளதுடன், மாணவர்களும் வடக்கு , கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments