Saturday, December 28, 2024
HomeSrilankaமொக்கா சூறாவளி கடலோரப்பகுதிகளின் எச்சரிக்கை நிலை நீடிப்பு

மொக்கா சூறாவளி கடலோரப்பகுதிகளின் எச்சரிக்கை நிலை நீடிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள “மொக்கா ” புயல் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளது.

இந்த சூறாவளி தற்போது பங்களாதேஷை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் 2023-ம் ஆண்டு வீசிய முதல் புயல் மொக்கா வங்காளதேசத்தின் சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் பகுதிகளுக்கு 14 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நுழையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை மணிக்கு 150 – 175 கிமீ வேகத்தில் வீசும் எனவும், வங்கதேசத்தின் கடலோரப் பகுதியில் கடல் அலைகள் 5 முதல் 6 அடி உயரம் வரை எழும்பக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூறாவளியின் தாக்கம் காரணமாக தீவின் பல பகுதிகளில் தற்போது கடும் மழை பெய்து பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments