Home Srilanka மதுபானங்களின் விலை குறைகிறது

மதுபானங்களின் விலை குறைகிறது

0

மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் குறைக்க நிதியமைச்சகம் தயாராகி வருகிறது.

கலால் வரி வருவாய் குறைந்ததால் மதுபானம் மற்றும் பியர் விற்பனை 40% சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மது மற்றும் பியர் விற்பனை வேகமாக குறைந்து வருவதாகவும் உற்பத்தி நிறுவனங்கள் நிதி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளன.

அதிக விலையே விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என உற்பத்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையில் கடந்த வாரம் கலந்துரையாடல் இடம்பெற்றது. வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வற் வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுபான வரியை ரூ.2000 குறைக்க வேண்டும் என்றும் உற்பத்தி நிறுவனங்கள் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

மதுபானத்தின் விலை உயர்வால் மக்கள் சட்டவிரோத மதுபான பாவனைக்கு அதிகளவில் பழகி வருவதாகவும் இங்கு பேசப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனமும் அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன், சட்டவிரோத மதுபான பாவனையால் சுகாதார அமைச்சின் செலவினம் அதிகரிக்கலாம் என நிதி அமைச்சின் கவன ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதுபானம் மற்றும் பியர் உற்பத்தியும் குறைந்துள்ளதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 15 இலட்சம் லீட்டர் எத்தனோல் களஞ்சியசாலைகளில் உள்ளதாக இலங்கை சீனி நிறுவனத்தின் தலைவர் சாரதா சமரகோன் தெரிவித்தார்.

மதுபானம் மற்றும் பியர் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் கலால் வரியை குறைக்குமாறும் கலால் திணைக்களம் நிதியமைச்சகத்திடம் முன்மொழிந்துள்ளது. இல்லாவிடின், 20% குறைவான அ ல்கஹாலை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கலால் திணைக்களம் பரிந்துரைத்துள்ளதாக கலால் ஊடகப் பேச்சாளர் மேலதிக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version