Home Srilanka உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் வரலாற்றுச் சிதைவுகள்!

உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் வரலாற்றுச் சிதைவுகள்!

0

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது.

இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது.

வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உருத்திரபுரஸ்வரபுரம் ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ளதாக தொல்லியல் திணைக்களம் கூறியுள்ளது.

ஆகவே குறித்த நிலப்பரப்பினை எல்லைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் 18 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானித்து கரைச்சி பிரதேச சபையினால் அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version