இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கொழும்பு செட்டியர் தெரு தங்கச் சந்தையில் இன்று (13) காலை ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக குறைந்துள்ளது. நேற்று (12) 161,600 ரூபாவாக பதிவாகி இருந்தது.
இதேவேளை, வெள்ளிக்கிழமை 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் “24 காரட்” தங்கத்தின் விலை தற்போது ரூ. 171,500 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியர் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.