அவுஸ்திரேலியாவின் முன்னாள் ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் விமானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு பரிசாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெள் ஸ்டீபன்ஸ், பீச்கிராப்ட் KA350 விமானத்தை வழங்கும் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.
பீச்கிராஃப்ட் கேஏ350 கிங் ஏர் ஒரு நவீன இரட்டை எஞ்சின் டர்போபிராப் விமானமாகும். “இந்தப் பரிசு இலங்கையின் கடல்சார் பாதுகாப்பைப் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்தும்.
இது நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான எங்கள் நெருங்கிய ஒத்துழைப்பின் மேலும் ஒரு நிரூபணமாகும்” என உயர் ஸ்தானிகர் ட்வீட் மூலம் தெரிவித்தார்.