Home Srilanka Politics ஆட்சி மாறினாலும் பொருளாதாரக் கொள்கைகள் மாற்றமடையக் கூடாது

ஆட்சி மாறினாலும் பொருளாதாரக் கொள்கைகள் மாற்றமடையக் கூடாது

0

ஆட்சி மாறினாலும், பொருளாதார கொள்கைகள் மாற்றமடைய கூடாது. தேசிய கொள்கை வகுப்பு ஆணைக்குழுவை அரசியலமைப்பின் ஊடாக ஸ்தாபிக்க விசேட கவனம் செலுத்த வேண்டும்.

சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் பாராளுமன்றத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களிலும் குழு அமைப்பது,அறிக்கை சமர்பிப்பது மாத்திரம் மிகுதியாகும் என குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால  கொள்கை வகுப்பு உப குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய பேரவையின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணல் பற்றிய உப குழுவின்  முதலாவது இடைக்கால அறிக்கையை வெள்ளிக்கிழமை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பொருளாதார மீட்சிக்கான குறுகிய ,நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைகளை வகுப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட உப குழு அமைக்கப்பட்டது.

கொள்கை உருவாக்கத்துக்காக அமைச்சுக்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள் உட்பட  பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.

முன்வைக்கப்படும் கொள்கை திட்டங்களை முறையாக செயற்படுத்தாவிட்டால் அது பாராளுமன்றத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாக காணப்படும்.சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை அரசியலமைப்பு ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட தாபனம் ஊடாக செயற்படுத்தாவிட்டால் 10 ஆவது பாராளுமன்றத்திலும் பிறிதொரு உப குழுவை அமைத்து ஆராய வேண்டும்.

தேசிய கொள்கை தொடர்பான ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் உட்பட பாராளுமன்றத்தின் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். நிலையான சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

அரசாங்கங்கள் மாற்றமடையும் போது பொருளாதார கொள்கைகள் மாற்றமடைந்தால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. ஆட்சி மாறினாலும் பொருளாதார கொள்கை மாற்றமடைய கூடாது என்ற வகையில் அரசியலமைப்பு ஊடாக உறுப்பாட்டை ஸ்தாபிக்க வேண்டும் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version