வர்த்தக வங்கிகளில் இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி இன்று மேலும் குறைவடைந்துள்ளது.
மக்கள் வங்கியில் நேற்று டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 305.59 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 322.51 ரூபாவாகவும் நிலவியது.
இன்று அங்கு டொலரின் கொள்வனவு பெறுமதி 303.63 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 320.97 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன. கொமர்சியல் வங்கியில் நேற்று டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 307.58 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 320 ரூபாவாகவும் நிலவியது.
இன்று அங்கு டொலரின் கொள்வனவு பெறுமதி 304.84 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 318 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன. சம்பத் வங்கியில் நேற்று டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 307 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 322 ரூபாவாகவும் நிலவியது.
இன்று அங்கு டொலரின் கொள்வனவு பெறுமதி 306 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 321 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.