இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய (12) நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் இடைக்கிடையே மழை பெய்யும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மோக்கா புயல் இன்று மிகவும் தீவிரமான சூறாவளியாக உருவாக வாய்ப்புள்ளது.
இதனால் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும் மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகளிலும் அவ்வப்போது (40-45) kmph வரை பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக களனி, களு, கிங், நில்வலா கங்கை மற்றும் அத்தனகல்லூயே ஆகிய நீர் மட்டம் சிறிதளவு உயர்ந்துள்ளன.
இதனால் அந்த ஆறுகள் மற்றும் அவற்றின் கிளை ஆறுகளை பயன்படுத்துவதில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.