உரத்திற்கான வவுச்சர்களை மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த வவுச்சர்களை குறிப்பாக பண்டி உரம் கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தவும். அத்துடன் இந்த வவுச்சர் ஊடாக விருப்பமான உர வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கைக்கு தரமான விதைகளைப் பயன்படுத்துமாறும், அதனூடாக அதிக விளைச்சலை பெற முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விளைச்சலுக்கு தேவையான கலைக்கொல்லிகள் மற்றும் கிருமி நாசினிகள், தனியார் நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்படும். அவற்றை குறைந்த விலையில் வழங்க அந் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்