சுற்றுலா பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரினை இலங்கை மகளிர் அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் மகளிர் அணியானது இலங்கையுடன் ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தது.
இதில் முதலாவதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை 1:0 என்ற நிலையில் கைப்பற்றியிருந்தது.
அதன் பின்னர் ஆரம்பமான முதல் T20 போட்டியில் பங்களாதேஷ் 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.
இரண்டாவது T20 போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1:1 என்ற கணக்கில் சமனிலையில் இருக்க, இன்று தொடரின் மூன்றாவது போட்டி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
இதனால் 44 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடரின் ஆட்டநாயகியாக நிலாக்ஷி டி சில்வா தெரிவானார்.