Home Srilanka சத்திர சிகிச்சைக்கு உள்ளான 32 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

சத்திர சிகிச்சைக்கு உள்ளான 32 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

0

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் 05 சத்திர சிகிச்சைக்குள்ளான 32 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன .

பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கும் , 25 பேர் கண்டி வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தவிடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மஹேந்திர செனவிரட்னவிடம் வினவிய போது இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்த சத்திரசிகிச்சையின் பின் பாவிக்கப்பட்ட தேசிய வைத்தியசாலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி ப்ரெட்னிசோலோன் மருந்தை பயன்படுத்தியமையால் ஏற்பட்ட சிக்கல் காரணமாகும்.

அண்மையில் கண் சத்திர சிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்கள் தாம் மீண்டும் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , ஓரளவு கண் பார்வை குறைவாக இருந்து சத்திர சிகிச்சை செய்த பின் முற்றாக பார்வை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version