கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கஞ்சி வழங்கும் வைபவம் புதன்கிழமை (10) நடைபெற்றுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (10) பகல் 09 மணிக்கு கிளிநொச்சி கந்த சுவாமி கோயில் முன்றலில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வின் முன்னதாக வர்த்தகர்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று பொதுமக்களிடம் பிடியரிசி பெற்று குறித்த ஆலய முன்றலில் கஞ்சி காய்ச்சப்பட்டு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.