நடிகை த்ரிஷாவுக்கு 40 வயதாகிறது. அவர் வருண் மணியன் என்ற தொழிலதிபரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்றது . ஆனால் சில காரணங்களால் திருமணத்தை த்ரிஷா நிறுத்திவிட்டார்.
அதற்கு பிறகு வருண் மணியன் இன்னொரு பிரபல நடிகை உடன் காதலில் இருக்கிறார் என தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பிந்து மாதவி தான் அது.
டேட்டிங்.. ஒப்புக்கொண்ட நடிகை
த்ரிஷாவை பிரிந்தபிறகு தான் வருண் மணியன் உடன் டேட்டிங் செய்ய தொடங்கியதாக பிந்து மாதவி கூறி இருக்கிறார்.
அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சில வருடங்களுக்கு முன்பே வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை பிந்து மாதவி இந்த காதலை உறுதி செய்து இருக்கிறார்.