அமெரிக்கா பசிபிக் தீவு நாடான டோங்காவில் நேற்றையதினம் புதிய தூதரகம் ஒன்றை திறந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வரும் பிராந்தியத்தில் தனது இராஜதந்திர தடயத்தை விரிவுபடுத்துவதற்கான அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கையாக இவ்விடயம் காணப்படுகிறது.
இந்த மாத இறுதியில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பயணத்தின் போது அதிபர் ஜோ பிடன் பப்புவா நியூ கினியாவுக்குச் செல்வார் என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய அதே நாளில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெளியுறவுத்துறை செய்தி
அமெரிக்க வரலாற்றில் அமெரிக்க அதிபர் ஒருவர் பசிபிக் நாட்டிற்கு செல்வதே இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில்,
”டோங்கா தூதரகம் திறப்பு, எங்கள் உறவின் புதுப்பித்தல் மற்றும் நமது இருதரப்பு உறவுகள், டோங்கா மக்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் கூட்டாண்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டின் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.” என்று தெரிவித்தார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், கடந்த ஆண்டு பசிபிக் தீவுகள் மன்ற தலைவர்கள் கூட்டத்தின் போது, கிரிபாட்டியில் உள்ள டோங்கா தூதரகத்தை திறப்பதற்கான பைடன் நிர்வாகத்தின் நோக்கத்தை அறிவித்தார்.
அமெரிக்க தூதரகம்
“இந்த நடவடிக்கைகள் அமெரிக்க-பசிபிக் தீவுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்தவும் பசிபிக் பிராந்தியவாதத்தை ஆதரிப்பதற்காகவும் பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுக்கின்றன” என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் கூறியது.
பெப்ரவரியில் சாலமன் தீவுகளில் தூதரகம் ஒன்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, டோங்கன் தலைநகர் நுகுஅலோபாவில் திறக்கப்பட்ட தூதரகம் இந்த ஆண்டு பசிபிக் தீவுகளில் திறக்கப்பட்ட இரண்டாவது அமெரிக்க தூதரகம் ஆகும்.