சீனா நினைத்தால், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ முடியும் என்று ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சரான கின் கேங், ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து அவர் பிரான்ஸ் மற்றும் நோர்வேக்குச் செல்ல இருக்கிறார்.
எரியும் நெருப்பில் எண்ணெ ஊற்றாது
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சரான எனலீனா பேர்பாக், கின் கேங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சரான கின் கேங்கை சந்தித்த பின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய எனலீனா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் அமைப்பின் நிரந்தர உறுப்பினர் என்னும் முறையில், சீனா முடிவு செய்தால் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்ற முடியும் என்றார்.
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் சந்திப்பில் எனலீனா முன்னிலையில் பேசிய கின் கேங், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் அமைப்பின் நிரந்தர உறுப்பினர் என்னும் முறையிலும், பொறுப்புள்ள பெரிய நாடு என்னும் முறையிலும் சீனா, தீப்பற்றி எரியும்போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டும் இராது, அதே நேரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெயும் ஊற்றாது.” என்றார்.
ஆனால், போரில் சீனா ஒரு தெளிவான முடிவெடுக்கவேண்டும் என்று கூறிய எனலீனா, ”நடுநிலை வகிப்பது என்பது தாக்குதல் நடத்துபவருக்கு ஆதரவாக நிற்பதைப் போன்றது, ஆகவேதான், நாங்கள் தாக்கப்படுபவருக்கு ஆதரவாக நிற்கிறோம்.” என தெரிவித்தார்.