பௌத்த சமுகத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரிய யூடியூபர் – வழக்கிலிருந்து விடுவிப்பு

இலங்கையின் பிரபல யூடியூபர் சேபால் அமரசிங்க மீதான குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தளதா மாளிகை தொடர்பில் அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் சேபால் அமரசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான குற்றங்களை மீண்டும் செய்ய போவதில்லை என சேபால் அமரசிங்க பௌத்த சமுகத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

இதனை பரிசீலித்த சட்டமா அதிபர், சேபால் அமரசிங்கவுக்கு எதிரான வழக்கை தொடர்வதில்லை என தீர்மானித்த நிலையில், வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Please follow and like us: