தேர்தல் நடக்குமா? நடக்காதா? 8ஆம் திகதி அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பினை அரசாங்கம் இம்மாதம் 8ஆம் திகதி வெளியிடவுள்ளது.
இடைநிறுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற அமர்வு வரும் எட்டாம் திகதி புதிதாக ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது நிதியமைச்சினால் தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்று வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் ஆளும்கட்சியினர் தேர்தல் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தனவை கடந்த வாரம் கேட்டுக்கொண்டனர்.
இதன்படி அரசாங்க உயர்மட்டத்தில் இந்த நாட்களில் தேர்தல் குறித்த முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
Please follow and like us: